வெலிகந்த பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் வயல் வெளியில் வேலைசெய்துகொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவத்தில் 17 மற்றும் 33 வயதுடை இருவரே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.