அட்டன், களனிவத்தை தோட்டத்தில் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அட்டன், களனிவத்தை தோட்டத்திலிருந்து குறித்த தோட்டத்தில் இடம்பெற்ற ஆலய நிகழ்வு ஒன்றுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார்  பஸ் ஒன்று மேற்படி களனிவத்தை ஆலயத்திற்கு அருகில்  இன்று 3 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுங்காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 10 பேரில் 6 சிறுவர்களும், 4 ஆண்களும் தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.