இராணுவத்தினருக்காக பிரித் புண்ணிய நிகழ்வில் ஜனாதிபதி!!!

Published By: Daya

19 May, 2018 | 04:49 PM
image

தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்காக இலங்கை மகாவலி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் புண்ணிய நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார். 

சகல மகாவலி வலயங்களையும் சேர்ந்த 200 மகா சங்கத்தினர் இப் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர். 

அமரபுர மகா நிக்காயவின் ஊவ உடுகிந்த மகா நாயக்க தேரரும் கலவுட ஸ்ரீ தம்மநிக்கியேத்தன பிரிவெனாவின் கலாநிதி வண. பொக்கன் ஒருவே ஜினானந்த நாயக்க தேரரும் சமய நிகழ்வுகளை நிகழ்த்தியதுடன், ராமஞ்ஞ மகா நிக்காயவின் தென்னிலங்கை பிரதான சங்க நாயக்கர் வண. ஓமல்பே சோபித்த நாயக்க தேரரினால் விசேட ஆசி உரை நிகழ்த்தப்பட்டது. 

அமெரிக்காவில் வசித்து வரும் பூஜியபாத கலாநிதி பொக்கன் ஒருவே தேவானந்த நாயக்க தேரரினால் பாளி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்ட பௌத்த புத்தகத் தொகுதிகளை ஜனாதிபதியினால் மகாவலி வலயங்களில் உள்ள விகாரைகளுக்கு வழங்கி வைத்தார். 

மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்ரசிறி வித்தான, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி உள்ளிட்ட முப்படை தளபதிகளும் பாதுகாப்புத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-03-29 12:00:05
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20