அரநாயக்க - தேபத்கம பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலில் கணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

நேற்று இரவு ஏற்பட்ட தனிப்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவி மீது எசிட் வீச முற்பட்ட போது அந்த எசிட் அவரின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து கூரிய ஆயுதத்தால் கணவன் மீது மனைவி தாக்கியுள்ளார். 

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் படுகாயமடைந்த கணவனை, திப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அரநாயக்க, தேபத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.