குழந்தைகளுக்கு  ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்புக்கு  சத்திர  சிகிச்சைதான் சிறந்த தீர்வு என்கிறார் வைத்தியர் பாலசுப்ரமணியன்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தை, குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், நோய் ஏற்பட்டு பல நாட்கள் செயற்கை சுவாக் கருவியின் மூலம் சிகிச்சைப் பெற்று வரும் குழந்தைகள் ஆகியோருக்கு மூச்சுகுழாய் பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.

சத்திர சிகிச்சையின் போது,  காது,  மூக்கு தொண்டைக்கான சிறப்பு சத்திர சிகிச்சை நிபுணர், குழந்தைகள் நலனுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர், குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சை நிபுணர், நெஞ்சக சத்திர சிகிச்சை நிபுணர் என பல பிரிவு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பங்களிப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.