இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று

Published By: Priyatharshan

19 May, 2018 | 07:23 AM
image

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று கோலாகலமாக லண்டனில் இடம்பெறவுள்ளது.

33 வயதாகும் இங்கிலாந்து இளவரசர் ஹரிக்கும் 36 வயதாகும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலுக்கும்  இடையில் காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்‌ஷயரில் அமைந்துலுள்ள வின்ட்சார் கோட்டையில், 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மதியம் இளவரசர் ஹரி-மேகன் திருமணம் மிகவும் கோலாகலமாக இடம்பெறுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக இடம்பெற்று வருகின்றன. இந்த திருமணத்தை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி நடத்தி வைக்கிறார்.

திருமண நிகழ்வில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதற்காக 11.20 மணிக்கு ராணி குடும்பத்தினர் தேவாலயத்திற்குள் வருவார்கள். அதைத்தொடர்ந்து திருமண வழிபாடுகள் நடைபெறும்.

இந்த தேவாலயத்தினுள் 800 பேர் அமரும் வசதி உள்ளது. சுமார் 600 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த திருமண விழாவையொட்டி வின்ட்சார் கோட்டையின் மீது இன்று விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்ததும், மணமக்கள் கேசில் ஹில், ஹை வீதி, ஷீட் வீதி, கிங்ஸ் சாலை, ஆல்பர்ட் சாலை, லாங்க் வாக் வழியாக ஊர்வலம் சென்று, பின்னர் வின்ட்சார் கோட்டைக்கு திரும்புவார்கள்.

அதைத்தொடர்ந்து அங்கு செயின்ட் ஜோர்ஜ் அரங்கத்தில் வரவேற்பு  நிகழ்வு இடம்பெறுகிறது.  மணமக்கள் கேக் வெட்டுவார்கள். லண்டன் வயலட் பேக்கரி, பிரத்தியேக கேக்கை தயாரித்து வழங்குகிறது. இந்த கேக்கை வெட்டி, வரவேற்பு விழாவில் கலந்துகொள்கிற 600 பேருக்கும் வழங்கப்படும்.

மாலையில் இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு ஹரியின் தந்தை இளவரசர் சார்லஸ் தனிப்பட்ட முறையில் வரவேற்பு அளிக்கிறார். இதில் மணமக்களும், குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் பங்கேற்பார்கள்.

இளவரசர் ஹரி, மேகன் திருமண விழாவில் மேகனின் தந்தை தாமஸ் மார்கில் கலந்துகொள்ளமாட்டார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டமையே காரணம். எனவே அவருக்கு பதிலாக அவரது மனைவி டோரியா ராக்லண்ட் மணமகள் மேகனை தேவாலயத்துக்குள் கைபிடித்து அழைத்து செல்வார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47