கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில்  104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர்.

கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு  குறித்த விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. 

பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

கியூபாவின் அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானா, பல பழைய விமானங்களை சமீபத்தில் இருந்து தான் பயன்படுத்துவதை நிறுத்தியது. விபத்துக்குள்ளான இந்த விமானம் சமீபத்தில் தான் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தது.