(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து பயணிப்பது குறித்து ஆராய நாளை 20 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். 

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையாக வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ள சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் தமது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து கலந்துரையாட  சகல அரசியல் தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். 

இந்நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்தித்து 16 பேரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். 

அத்துடன் மாநாயக்க தேரர்களின் ஆசியுடன் புதிய அரசியல் பயணம் ஒன்றுக்கான அடித்தளம் போடப்படுகின்றது எனவும் அவ்வணியினர் தெரிவித்துள்ளனர்.