ருவாண்டா நாட்டின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று அங்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அந் நாட்டுடானான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

ருவாண்டாவின் தலைநகர் கிஹாலியில் வைத்து ருவாண்டாவின் தரப்பில் ஜெனரல் ஜேம்ஸ் கபா ரிபே இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.