அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னும் பகுதியில் இயங்கிவந்த பாடசாலையொன்றில் மர்ம நபர் இன்று திடீரென நுழைந்துள்ளார். குறித்த மர்ம நபர் பாடசாலையில் இருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

இந்த தாக்குதலில் சுமார் 10 மாணவர்கள் பலியாகியுள்ளதாகவும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் கயமடைந்தவர்களில் ஒரு பொலிஸ் அதிகாரியும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்டநபர் 17 வயதுடைய குறித்த பாடசாலையின் பழைய மாணவரென பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆயுததாரியை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவிக்கையில், டெக்சாசில் இருந்து கிடைக்கும் தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.