மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Published By: Daya

18 May, 2018 | 04:04 PM
image

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பொது அமைப்புகள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டித்தது. 

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், தமிழின உணர்வாளர் டாக்டர் தமிழ்நேசன், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார்,செயலாளர் எஸ்.நிலாந்தன் உட்பட பெருமளமான பொதுமக்கள்,மதகுருமார்கள்,பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள்  மற்றும் சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள், அருட்தந்தை நிக்ஸன் அடிகளார் ஆகியோரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வடகிழக்கில் உயிரிழந்த உறவுகளுக்காக இரு நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது அதனைத்தொடர்ந்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஏனைய நாடுகளில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு அந்த நாடுகள் நீதியை வழங்கியுள்ள நிலையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழின இனப்படுகொலைக்கு இதுவரையில் எந்தவித விசாரணையோ அல்லது கவலையோ தெரிவிக்கப்படவில்லையெனவும இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முடிந்த முடிவாகவே இருக்கவேண்டும் என்பதே தவிர அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04