இந்திய இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

Published By: Priyatharshan

18 May, 2018 | 01:32 PM
image

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் இன்று  முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

சகோதர அயல்நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவினை மேலும் பலப்படுத்துவது தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிட்ட இந்திய இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானி, இதற்கு இலங்கை அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

புலனாய்வு பிரிவை பயிற்றுவித்தல் மற்றும் இருநாடுகளுக்கிடையில் நவீன தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தீவு நாடு என்ற வகையில் சட்ட விரோத போதைப்பொருள் கடத்தல் காரணமாக இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதனை தடை செய்வதற்கு இந்திய இராணுவத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதியினால் இந்திய இராணுவ பணிக்குழாம் பிரதானிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52