நுவரெலியா நகரில் நபரொருவர்  தங்க நகை கடைக்கு சென்று தங்கங்களை கொள்வனவு செய்வது போல சூட்சுமமான முறையில்  தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி. கெமராவில் பதிவாகியுள்ள  நிலையில் நுவரெலியா பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

குறித்த கடைக்கு நகை வாங்குவது போல் சூட்சுமமான முறையில் கடந்த 16 ஆம் திகதி காலையில்  குறித்த சந்தேக நபர்  கடையின் ஊழியர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்த நிலையில், லாவகமான முறையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மோதிரம் மற்றும் காதணி ஆகிய நகைகளை திருடி காற்சட்டை பையில் வைக்கும் காட்சிகளும் சி.சி.டி.வி. கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

குறித்த கடை உரிமையாளர் சி.சி.டி.வி. கெமராவில் காட்சிகளை பார்த்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதோடு, முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை  நுவரெலியா பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.