முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் ‘தீபமேந்திய ஊர்தி பவனி’ நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தீபமேந்திய ஊர்தியினை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்களையும் அவ்விடத்திற்கு வந்தோரையும் தமது கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்தனர்.

இதனால் சற்று பதற்றத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் குறித்தநபர்கள் மீதான அச்சத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தயங்கி நின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து நல்லாட்சி நிலவுகின்ற போதிலும் நல்லாட்சி அரசிலும் இவ்வாறு இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.