(எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் தற்‍போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து எதிரணியினர் எம்மை விமர்சிக்கின்றனர். நாட்டில் தற்போதுள்ள நிலைக்கு நாம் காரணமல்ல முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவத்தார்.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தினால் அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் பலமாகியுள்ளது. இதன் காரணமாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. ஏனைய நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. எனினும் இதற்கு எம்மால் முகங்கொடுக்க முடியும். ரூபாவின் பெறுமதியை அதிகிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பொருளாதாரத்தின் நெருக்கடி நிலை குறித்து எதிரணியினர் எம்மை விமர்சிக்கின்றனர். நாட்டின் தற்போதைய  நிலைமைக்கு நாம் காரணமல்ல. 

நாட்டின் ஆட்சியும் பொருளாதாரமும் முன்பு மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே இருந்தது. அப்போது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது போனது ஏன்? பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் தப்பித்து ஓடியது ஏன்? அப்போது தப்பித்து ஒடிவிட்டு தற்போது எம்மை விமர்சிப்பதனை ஏற்க முடியாது.

அத்துடன் முன்னாள் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை செலுத்தி பொருளாதாரத்தை சீராக்கி இந்த அரசாங்கத்தை பாதுகாத்து முன்கொண்டு செல்ல வேண்டும் என்றார்.