மேற்கிந்திய தீவுகள் அணி உடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு இலங்கை அணியின் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மல் ஆகியோர் தகுதிபெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாக மேற்கிந்தியத்தீவுகளில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிக்காக இலங்கை அணி சார்பில் 17 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு கடந்த வாரம் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

இருப்பினும் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகிய இருவரின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் இருவரும் உடற்தகுதிப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்வது உறுதிசெய்யப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இருவரும் சிறந்த உடல் தகுதியுடன் காணப்படுவதனால் இருவரின் பெயரும் மேற்கிந்தியா செல்வதற்காக பெயரிடப்பட்ட இலங்கை குழாமில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.