மட்டக்களப்பு, கித்துள் ஆற்றில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் 4 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட சாரதி உட்பட மூன்று போரை கரடியனாறு பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து ஆறு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை கடந்த புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்செயதபோது, நீதிவான் 4 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.