வவுனியா - காத்தார்சின்னக்குளம் பகுதியில் இறந்த எருமை மாடு ஒன்றினை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த 90 கிலோ இறைச்சியும் விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

காத்தார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் எருமை மாடு கழுத்தில் கயிறு இறுகி உயிரிழந்த விடயத்தை தனது உறவினரிடம் தெரிவித்து உயிரிழந்த எருமை மாட்டினைக் கொடுத்துள்ளார்.

உயிரிழந்த எருமை மாட்டினைப் பெற்றுக் கொண்டவர் அவரது நண்பனையும் அழைத்துக் கொண்டு உயிரிழந்த எருமை மாட்டினை வெட்டி இறைச்சியாக்க முற்பட்ட போதே  விஷேட  அதிரடிப்படையினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்து,  90 கிலோ வெட்டிய இறைச்சியுடன் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும், கைப்பற்றப்பட்ட 90 கிலோ இறைச்சியையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.