வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீபமேற்றிய ஊர்தியில் இன்று பிற்பகல் வேளையில் பஜார் வீதியில் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்கள் சுடர் ஏற்றுவதற்கு நிறுத்தப்பட்டிருந்தபோது அவ்வீதியால் சென்ற வெளிநாட்டு பெண் பிரஜை ஒருவர் பலருக்கு முன்னுதாரணமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு சுடர் ஏற்றியுள்ளார்.

வல்வெட்டித்துறையிலிருந்து நேற்று ஆரம்பமான குறித்த வாகன ஊர்தி கிளிநொச்சி, மாங்குளம், ஓமந்தை ஊடாக இன்று பிற்பகல் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதியூடாக சென்றபோதே குறித்த வெளிநாட்டு பிரஜை வாகனத்தில் ஏறி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தீபமேந்திய நினைவுச்சுடரினை ஏற்றி, இரு கரம் கூப்பி வழிபட்டு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.