சங்கானை -அராலிவீதி பகுதியில் இரவில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் இரு வீடுகளின் கண்ணாடி யன்னல்கள் கல்லால் எறிந்து உடைக்கப்பட்டுள்ளன. அதேவேளை மாவடி வைரவர் ஆலயத்தின் பின்புற வீதியில் இரவு நேரங்களில் அரைக்காற்சட்டையுடன் நபர் ஒருவர் நிற்பதை பொதுமக்கள் அவதானித்து அப்பகுதி இளைஞர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். 

இதனை அவதானித்த குறித்த  சந்தேக நபர் வயல் வெளியூடாகத் தப்பிச் சென்றுவிட்டார்.  அதனையடுத்து இவ்வாலயத்தின் அருகிலுள்ள வீட்டு வளர்ப்பு நாயும் மர்மமான முறையில் அன்றிரவு கொல்லப்பட்டுள்ளது. 

குறித்த அராலி வீதியிலுள்ள அலுமினிய கடையின் கதவுகள் இரவு நேரங்களில்  தகர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.