முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேந்திய வாகனம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து இன்று காலை 10 மணியளவில்  பயணத்தை ஆரம்பித்தது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து ஆரம்பித்த சுடரேந்திய வாகனம் மன்னார், வவுனியாவின் பல பகுதிகளிற்கு சென்றடையவுள்ளது.

தொடர்ந்து நாளை முள்ளிவாய்க்கால் நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

இன்று காலை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இணைப்பாளர் கலாரஞ்சினி சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.