வவுனியாவை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் பவனி

Published By: Daya

17 May, 2018 | 04:23 PM
image

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் 'தீபமேந்திய ஊர்தி பவனி' இன்று (17.05) மதியம் 12.00 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து பவனியை ஆரம்பித்த ஊர்தி யாழ்ப்பாணம் , கிளிநொச்சி , மாங்குளம் , ஓமந்தையூடாக வவுனியா நகரை வந்தடைந்தது.

இளைஞர்களால் ஒழுங்கமைத்து நடாத்தப்படும் தீப ஊர்திப் பவனி இன்று மாலை மன்னார் நகரை சென்றடைந்து மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக மல்லாவி - மாங்குளம் - ஒட்டுசுட்டான் ஊடாக நாளைய தினம் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய இருக்கின்றது.

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத்துமாறு  மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்