தேசிய போஷாக்கு தேவையை நிறைவேற்ற 46 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முதற்தர நிறுவனமான கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் ஊழியர்களின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிறிஸ்ப்றோ குழுமத்தின் 6 நிறுவனங்களை சேர்ந்த நாடு முழுவதும் உள்ள 17 வர்த்தக ஸ்தானங்களை சேர்ந்த 1,100 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். பணிப்பாளர் குழு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை குழுவினரும் இதில் அடங்குவர்.

2017 இல் அதிக திறமைகளை வெளிப்படுத்திய 32 ஊழியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருது வென்ற 16 கனிஷ்ட ஊழியர்களுக்கு பணப் பரிசுகளும் விருதும் வழங்கப்பட்டதுடன் அவர்கள் தமது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கும் அனுசரணை வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்ட நிறைவேற்று தரத்தை சேர்ந்த 12 உறுப்பினர்களுக்கு பணப் பரிசும்ரூபவ் விருதும் வழங்கப்பட்டதுடன் குடும்பத்துடன் சுற்றலா சென்று நட்சத்திர ஹோட்டலில் இரவை தமது குடும்பத்துடன் கழிக்க அனுசரணை வழங்கப்பட்டது. 

சிரேஷ்ட முகாமையாளர் 3 பேருக்கு விருது வழங்கப்பட்டதுடன் அவர்கள் குடும்பத்தினருடன் வெளிநாட்டு சுற்றுலா செல்ல அனுசரணை வழங்கப்பட்டது. நிறுவனத்தில் 5 முதல் 25 வருடங்கள் வரை பணியாற்றியவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்காக நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்களுக்கு வழங்குவதற்காக 5 முழுமையான வீடுகளை அமைக்கவும் 20 வீடுகளை புனரமைப்பதற்குமான பணிகள் இதன்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

வைபவத்தில் உரையாற்றிய கிறிஸ்ப்றோ குழும தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸ், றிஸ்ப்றோ வர்த்தக நாமத்தின் வெற்றிகரமான பயணத்தை விபரித்தார். நிறுவனத்துடன் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அவர், அனைவரது அர்ப்பணிப்பு,நேர்மை, ஆக்கத்திறன் போன்றனவே கிறிஸ்ப்றோ குழுமத்தின் வெற்றியை உறுதியாக்க முடியும் என்றார். 

கிறிஸ்ப்றோ நிறுவன வெற்றிக்கு பங்காற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். இவ்வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விருதுகளான “சுற்றாடல் விருது” மற்றும் “அதிக திறமையான பண்ணை விருது” ஆகியவற்றை முறையே கல்கமுவ பண்ணை மற்றும் பரகல பண்ணை வென்றெடுத்தன. இந்த விருதுகள் இரண்டும் எதிர்காலத்தில் அந்தந்த பண்ணைகள் வெளிப்படுத்தும் திறமை மற்றும் வெற்றிகளுக்கு அமைய வழங்கப்படும்.

ஊழியர் குழுவின் பிள்ளைகளின் நடன திறமைகளை ஊக்குவிக்க இந்த வருடம் முதல் ‘சிசு திரிய” நடனப் போட்டியில் வெற்றியீட்டிய குழுவினருக்கு விருது விழாவில் தமது திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தமை விசேட அம்சமாகும். கிறிஸ்ப்றோ குழுமத்தின் மனித வள மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன மஹிந்தசிறி கருத்து தெரிவிக்கையில்,

ஊழியர் குழுவின் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து அதற்கு மேடை அமைப்பது கிறிஸ்ப்றோ குழுமத்தின் எதிர்பார்ப்பாகும். அத்துடன் ஊழியர்களை ஊக்குவித்து விற்பனையை வெற்றிகரமாக்கவே இவ்வருடம் புதிய விருதுகளை அறிமுகப்படுத்த காரணம் என கூறினார்.

1972 ஆம் ஆண்டு 100 கோழி குஞ்சுகளுடன் ஆரம்பமான கிறிஸ்ப்றோ அன்று முதலே சந்தையில் முன்னணியாக செயற்படுகின்றது. தரம், த்துணர்வு மற்றும் நவீனமயத்துக்காக அதிக முக்கியத்துவத்தை கொடுத்து இலங்கையின் முன்னணி கோழி உற்பத்தி வர்த்தக நாமமாக முன்னேறியது. தாய் பண்ணை, குஞ்சு பொரிப்பக பண்ணை, ரொய்லர் பண்ணை மற்றும் கோழி உணவு உற்பத்தி மண்டபம் உட்பட படர்ந்து விரிந்த இடத்தை கிறிஸ்ப்றோ கொண்டுள்ளது. “பண்ணையிலிருந்து கரண்டி வரை” (Farm to Fork) ரை என்ற எண்ணமே நிறுவனத்தின் தாரக மந்திரமாகும். கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் வெற்றிக்கு வெளி கோழி உற்பத்தியளார்கள்,சோளம் உற்பத்தியாளர்கள் போன்று இலங்கை வாடிக்கையாளர்களும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.