மாத்தறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்புருபிட்டிய - நம்பியாமுல்ல பிரதேசத்தில் வைத்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இன்று மேலதிக விசாரணைகளுக்காக கம்புருபிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் கம்புருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த  43 வயதுடைய நபராவார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்புருபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.