செயற்கை மழையை பொழிய வைக்கும் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளதா என்பது குறித்து சீனாவின் காலநிலை தொடர்பான நிபுணர்களின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தலைமையில் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோர்டர் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற விவசாயத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போதே சீனாவின் காலநிலை தொடர்பான நிபுணர்கள் இலங்கையில் செயற்கை மழை பெய்யவைப்பது தொடர்பான அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தமை குறிப்பிடதக்கது.