(இரோஷா வேலு) 

இங்கிரிய ஊருகல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெண்னொருவர் உட்பட நான்குபேரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

ஊருகல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்தவர்களிடம் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவர்களிடமிருந்து 1,750 மில்லிகிராம் ஹேரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டதுடன் அவர்கள் பயணம் தந்த குறித்த வானத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் நால்வரும் வடகர -  மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28,29, 30 மற்றும் 36 வயதுடையவர்கள் தெரியவந்துள்ளது.