(இராஜதுரை ஹஷான்)

மடு தேவாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மடு தேவாலயத்தை சூழவுள்ள பகுதிகளில் 300 வீடுகளை நிர்மாணிக்க சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்கள் அமைச்சு முன்வைத்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. 

மன்னார் மடுமாத தேவாலயம் ஒரு வரலாற்றுமிக்க வணக்கஸ்தலமாக காணப்படுவது மடடுமல்லாது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாகவும் உள்ளது. இந் நிலையில் அங்கு வரும் பக்தர்களினதும் சுற்றுலாப் பயணிகளினதும் நலன் கருதி அப் பகுதியில் 300 வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் இந்த நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து செல்வதற்கான நிதியை இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.