விபத்திற்குள்ளான பெண்ணொருவரை தனது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளார் நடிகரும் மக்கள் மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல் ஹாசன்,  வீதியில் பெண்ணொருவர் விபத்துக்குள்ளானதைக் கண்டு உடனடியாக இறங்கி தனது வாகனத்தில் ஏற்றி குறித்த பெண்ணை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளார்.