வவுனியா, கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

கடந்த முதலாம் திகதி வவுனியா கல்மடு சாளம்பன் பிரதேசத்தில் வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் புகுந்த சிலர் இருபது இலட்சம் பெறுமதியான நகை மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை திருடிச்சென்றிருந்தனர். 

இது தொடர்பில் வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா  பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோனின் வழிகாட்டலில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னகோன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோ ஆகியோரின் மேற்பார்வையின் கீழ்  பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மன்னார் பகுதியை சேர்ந்த 3 முஸ்லிம் இளைஞர்கள், திருகோணமலை மற்றும் வவுனியாவை சேர்ந்த ஒவ்வொருவர் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இவர்கள் மீது முன்னரும் பல குற்றசாட்டுகள் பதிவு செய்யபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.