கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள காட்சிபடுத்தபட்டிருந்த தொழிற்சங்க அரசியல்வாதிகளி பெயர்பலகைகைளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கொட்டகலை பிரதேச சபையி தலைவரால் இன்று தீர்மானம் ஒன்று முன்னெடுக்கபட்டது .

கொட்டகலை பகுதியில் அரசியல் வாதிகளின் விருப்பத்திற்கேற்ப பெயர்பலகைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த கட்சி பலகைகள் பாரிய அளவில் காணப்படுவதோடு, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஊடாக சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை தருகின்றமையால் குறித்த பிரதேசத்திற்கு இது போன்ற காட்சி பெயர்பலகைகள் பொருத்தமில்லையென கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத்  தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

குறித்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் பிரதேச சபையின் ஊடாக அனுமதி பெற்று அதற்கான  பொறுத்தமான பகுதியில் மாத்திரம் இந்த பெயர்பலகைகளை காட்சிப்படுத்த முடியுமெனவும் மலையக அரசியல் வாதிகளுக்கு விருப்பபட்ட பிரதேசங்களில் பெயர்ப்பலகை காட்சிப்படுத்த தடைவிதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து இன்றயதினம் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளருக்கு இந்த பணிப்புரை விடுக்கபட்டமைக்கு எதிராக அனைத்து காட்சிப்படுத்தபட்ட பெயர் பலகைகளும் அகற்றபட்டதாக தெரிவித்தார்.