வவுனியா சிறைச்சாலைக்கு சிவசக்தி ஆனந்தன் எம்.பி விஜயம்

Published By: Daya

16 May, 2018 | 04:33 PM
image

வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியகராஜா ஆகியோர்  இன்று சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு எதிராக பல்வேறு அநீதிகள் இடம்பெறுவதாக அண்மையில் கைதி ஒருவர் வவுனியா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து கைதிகளிற்கு எதிராக இடம்பெறும் அநீதிகளை கண்டித்தும் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை நடைபெறுவதாகவும் கூறி சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து சில கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சிறைக்கைதிகள் நேற்றைய தினம் உணவுதவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். 

இவ்விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராஜாவும் விளக்மறியல் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது கைதிகளுடனும் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் கலந்துரையாடியிருந்தனர். 

குறித்த சிறைச்சாலைக்குள் போதைபொருள் பாவனையுள்ளதாக கைதிகள் தெரிவித்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார். 

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் 55 கைதிகளை மாத்திரமே  தங்க வைக்க முடியும்.

இந்நிலையில் சுமார் 258 பேரை தங்க வைக்கின்ற நிலைமை  காரணமாக இட வசதியின்மை   ஏற்பட்டமையால் சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும் அது நிறுத்தப்பட்டதாக சிறைக்கைதிகள் தெரிவித்திருந்ததாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47