அரசாங்கம் பதவி விலகாவிட்டால் போராட்டம் வெடிக்கும் : எச்சரிக்கிறது ஜே.வி.பி.

Published By: Daya

16 May, 2018 | 12:10 PM
image

சாதா­ரண மக்­களின் வாழ்­வா­தார செலவு நான்­கா­யிரம் ரூபாவால் உயர்­வ­டைந்­துள்ள நிலையில் மேலும் பொரு­ளா­தார சுமை­களை சுமத்தி வரி­களின் மூல­மாக நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சி நடத்­து­கின்­றது என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

அர­சாங்­கத்தை வீழ்த்த மக்­களை  ஒன்றிணைத்து வீதியிலிறங்கி போரா­டு­வதை தவிர மாற்று வழி­முறை இல்லை. ஆகவே இம்­மாதம் 22ஆம் திக­தியிலிருந்து அர­சாங்­கத்­திற்கு எதி­ரான  போராட்டம் தொடங்கும் எனவும் அக்­கட்சி கூறி­யது.  

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் ஊட­கப்­பேச்­சாளர் விஜித ஹேரத் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர்  மேலும் கருத்துக் கூறு­கையில்; 

எரி­பொருள் விலை உயர்வு கார­ண­மாக மக்­களின் அத்­தி­யா­வ­சிய பாவனைப் பொருட்கள் அனைத்தினது விலைகளும் உயர்­வ­டைந்­துள்­ளன. ஆட்­சிக்கு வந்­த­வுடன் எரி­பொருள் வரியை குறைப்­ப­தாக கூறி­னாலும் இப்­போது வரி­களை  உயர்த்­தி­யுள்­ளது. டீசல் மற்றும் பெற்றோல் இரண்­டிற்கும் வரி­களை விதிக்­கின்­றனர். உலக சந்­தையில் டொலரின் பெறு­மதி வீழ்ச்சி  என்­பதை காரணம் காட்­டிய போதிலும் அது உண்மை இல்லை. 

இந்த அர­சாங்கம் பெற்றோல் மற்றும் டீசல் இரண்­டிற்கும் வரி அற­வீ­டு­களை செய்து தமது வரு­மா­னத்தை அதி­க­ரித்­துள்­ளது. சாதா­ரண மக்­களின் நாளாந்த வரு­மா­னத்தில் வரி­களை உயர்த்தி அவர்­களின் பணத்தை சுரண்டும் நோக்­கினை அர­சாங்கம் கைவிட வேண்டும். இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தை முழு­மை­யாக மூடி­விட்டு லங்கா ஐ.ஒ.சி நிறு­வ­னத்­திற்கு மட்­டுமே பெற்றோல் கொள்­வ­னவை வழங்கும் நோக்­கமும் உள்­ளது. வரி­களை அற­விட்டு அதன் மூல­மாக அர­சாங்கம் சுக­போக வாழ்க்­கை­யினை வாழவே முயற்­சித்து வரு­கின்­றது. ஆகவே இந்த நோக்­கினை அர­சாங்கம் கைவிட வேண்டும். இந்த அர­சாங்­கத்­தினால்  சரி­யான பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்தை கையாள முடி­யாதுள்­ளது. 

மேலும் பால்­மாவின் விலை உயர்­வ­டைந்­துள்­ளது.  இப்­போது வரையில்  பால் மா பக்கற்  ஒன்­றுக்­கான வரி­யாக 111 ரூபா அற­வி­டப்­பட்­டு­ வ­ரு­கின்­றது. இந்த நிலையில் மேலும் 50 ரூபா­வினால் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது மிகவும் மோச­மான செயற்­பா­டாகும்.

மக்­களை ஏமாற்றி மக்­களின் பணத்தை சுரண்டி அதன் மூலம் அமைச்­சர்­களும், அதி­கா­ரி­களும் மாத்­திரம் சுக­போக வாழ்க்­கை­யினை வாழ்ந்து வரு­கின்­றனர். அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் வரியை அநா­வ­சியப் செயற்­பா­டு­க­ளுக்கு ஒதுக்­கு­கின்­றனர். மத்­திய வங்கி நட்­டத்தை மக்கள் மீது சுமத்­தி­யுள்­ளனர். அர­சாங்­கத்தின் நாச­கார செல­வு­க­ளுக்கு பொது­மக்கள் உழைப்பை ஒதுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

அமைச்­சர்­களின் வாக­னங்­களை வாங்க, வீட்­டினை பரா­ம­ரிக்­க­வென  150 கோடிக்கும் அதி­க­மாக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. 60 கோடி ரூபா செல­வ­ழித்து பிர­தமர் கார் வாங்­கி­யுள்ளார். இந்த நிதி சாதா­ர­ண­ அடி­மட்ட வாழ்க்கை வாழும் மக்­களின் வரிப்­ப­ண­மாகும்.

இன்று ஒரு நடுத்­தர குடும்­பத்தின் மாதாந்த செலவு  4 ஆயிரம் ரூபாவால் அதி­க­ரித்­துள்­ளது. ஒரு மாதத்­துக்கு  70 ஆயிரம் ரூபா அளவில்  தேவைப்­ப­டு­கின்­றது. அத்­தி­யா­வ­சிய பொருட்கள்  அனைத்­துமே இரு மடங்கு விலை உயர்வை எட்­டி­யுள்­ளன. மருந்துப் பொருட்­களின்  விலைகள் உயர்ந்துள்ளன. சாதா­ரண தொழி­லாளர் நாளாந்த வாழ்க்­கை­யினை வாழ மிகவும் கடி­னப்­படும் நிலைமை உரு­வா­கி­யுள்­ளது. 

மக்கள் பட்­டி­னியிலிருந்­து­கொண்டு அர­சாங்­கத்தை பாது­காக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே அர­சாங்கம் செயற்­ப­டு­கின்­றது.

இந்த ஆண்டில் மாத்­திரம் அர­சாங்கம் 4 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் சர்­வ­தேச கடன்­களை செலுத்த வேண்­டி­யுள்­ளது.  கடந்த மூன்று ஆண்­டு­களில் மாத்­திரம் 3300 பில்­லியன் கட­னாக பெற்­றுள்­ளனர்.

ஒரு நாளைக்கு 300 கோடி ரூபா என்ற ரீதியில் இந்த அர­சாங்கம் கடன்­களை பெறு­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆயினும் இந்த பணம் முழு­மை­யாக மக்கள் நலன்­க­ளுக்­காக சென்­ற­டை­கின்­றதா? வெறு­மனே அர­சியல் வாதிகள் தமது சட்­டைப்­பை­களை நிறைத்­துக்­கொண்டு மக்­களை கட­னா­ளி­யாக மாற்றி வரு­கின்­றனர் எனக் குறிப்­பிட்டார். 

செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­வித்த ஜே.வி.பி.உறுப்­பினர் லால் காந்த கூறு­கையில்; 

அர­சாங்­கத்தின் மோச­மான வரி அற­வீ­டு­களை தடுக்க, மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள மக்­க­ளுடன் வீதிக்கு இறங்கி அர­சாங்­கத்தை  எதிர்த்து போராட்­டத்தை முன்­னெ­டுத்து அதன் மூலம் வாழ்­வா­தார உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும். இல்­லையேல் இந்த அர­சாங்­கத்தை விரட்டும் போராட்­டத்தை எந்த வழி­யி­லேனும் முன்­னெ­டுக்க வேண்டும்.

இதை தவிர வேறு ஒரு மாற்று வழி­முறை இல்லை. மக்­களின் பொறுமை இனியும் சோதிக்­கப்­ப­டக்­கூ­டாது. ஆகவே மக்கள் விடு­தலை முன்­னணி பாரிய போராட்­டத்­தினை  முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

முதல் போராட்டம் 22ஆம் திகதி கொழும்பிலிருந்து ஆரம்­பிக்­க­ப்ப­ட­வுள்­ளது. இது கட்­சியின் செயற்­பாடு அல்ல, மக்­களின் செயற்­பாடு. கட்­சியின் அடை­யா­ளத்தை ஒரு பக்­கத்தில் போட்­டு­விட்டு கஷ்­டத்தை அனு­ப­விக்கும், வலியை உணரும் அனைத்து மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து போரா­டு­வதன் மூலமே  இந்த அர­சாங்­கத்தை தடிக்க முடியும்.  

இந்த அர­சாங்கம் வரு­மா­னத்தை மக்­களின் வரி­களின் மூல­மாக மட்­டுமே பெற்­று­க்கொள்ள முயற்­சிக்­கின்­றது.ஏற்­று­மதி உற்­பத்­திகள் என ஒன்றும் இல்லை. உறுதியாக உள்நாட்டு கொள்கை ஒன்று இல்லை.

அரசாங்கம் தன்னால் நாட்டினை வழிநடத்த முடியாது என தெரிவித்து விட்டது. ஆகவே அரசாங்கம் பதவி விலக வேண்டும். இல்லையேல் மக்கள் ஆட்சியை வீழ்த்த வேண்டும். எனவே சகல மக்களும் கட்சிகளை மறந்து பொது உரிமைக்காக போராடுவோம். இதில் உங்கள் அடையாளங்களுடன் வந்தாலும் பரவாயில்லை. ஆகவே வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறுவழி இல்லை. அரசாங்கத்தை அச்சுறுத்த மாற்று வழியும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55