முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் விட­யத்தில் முரண்­பட்­ட­ எம்­மவர், நிகழ்வின் தாற்­பரியம் உணர்ந்­து­ ஒன்­று­சேர்ந்­து உ­யி­ரி­ழந்­தோ­ரு க்­கு­ அஞ்­ச­லி­யையும் உற­வு­களை இழந்தோ­ருக்­கு­ தே­று­த­லையும் ஆறு­த­லையும் வழங்க­ முன்­வந்­துள்­ளார்கள். இதன் அடிப்­படையில் தமிழ் மக்கள் எங்­கி­ருப்­பினும் எமது இனத்­துக்கு 2009ஆம் ஆண்­டு­ மே ­மாதம் 18 ஆம்  திகதி ஏற்­பட்­ட­ பா­ரி­ய­ ம­னி­த­ அ­ழிவை இவ்­வ­ரு­டமும் அதே­நாளில் நினை­வு­கொள்­ள முன் வர­வேண்டும் என்­று ­கேட்டுக் கொள்­கின்றேன் என்று  வடக்கு முதல்வர் சி.வி.விக்­கி­னேஸ்வரன் அழைப்பு விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்கையில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இவ்­வ­ரு­ட­முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வு­மு­ரண்­பா­டு­க­ளின்­றி­உ­ணர்­வு­பூர்­வ­மா­க­ச­க­ல­மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து ­ந­டத்­தப்­ப­ட­வேண்டும் என்­ப­தே­எல்­லோ­ரதும் விருப்­பமும் எதிர்­பார்ப்­பு­மாக உள்­ளது.  

முரண்­பட்­ட ­எம்­மவர், நிகழ்வின் தாற்­பர்யம் உணர்ந்­து­ ஒன்­று­சேர்ந்­து­ உ­யி­ரி­ழந்­தோ­ருக்­கு­ அஞ்­ச­லி­யையும் உற­வு­களை இழந்­தோ­ருக்­கு­தே­று­த­லையும் ஆறு­த­லையும் வழங்­க­முன்­வந்­துள்­ளார்கள். இதன் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் எங்­கி­ருப்­பினும் எமது இனத்­துக்கு 2009ஆம் ஆண்­டு ­மே ­மாதம் 18ஆம்  திகதி ஏற்­பட்­ட­ பா­ரி­ய­ ம­னி­த ­அ­ழிவை இவ்­வ­ரு­டமும் அதே­நாளில் நினை­வு­கொள்­ள முன்வர­வேண்டும் என்­று­கேட்டுக் கொள்­கின்றேன். பின்­வரும் நட­வ­டிக்­கை­க­ளை ­எ­ம­து ­மக்­க­ளிடம் இருந்­துநாம் எதிர் பார்க்­கின்றோம். 

 2018ஆம் ஆண்­டு­ மே­ மாதம் 18ஆம் திக­தி­காலை 11.00மணிக்­கு­ பொதுச் சுடர் முள்­ளி­வாய்க்­காலில் ஏற்­றப்­பட இருக்கும் நேரத்தில் இறந்­த­எ­ம­து­உ­ற­வு­களின் சார்­பா­கஎம் மக்கள் எங்­கி­ருப்­பினும் இரண்­டு­நி­மி­ட­மௌனம் காக்­க­வேண்டும்.  

 அதே­நே­ரத்தில் சம­யத்­த­லங்­களில் பூசை­களில் வழி­பா­டு­களில் எம் மக்கள் ஈடு­ப­டலாம். அகா­ல ­ம­ர­ண­ம­டைந்­த ­ஆத்­மாக்கள் சாந்­தி­பெ­ற­ பி­ரார்த்­த­னை­களில் ஈடு­ப­டலாம். 

 எம­து ­வ­ணி­க­ ச­கோ­த­ர ­ச­கோ­த­ரிகள் அன்­று ­ம­தியம் 12மணி­வ­ரை­ த­ம­து­ க­டை­க­ளை­ அ­டைத்­து­ த­ம­து­ உ­ணர்­வு­க­ளையும் ஒற்­று­மை­யையும் வெளிப்­ப­டுத்­து­வ­தைநாம் வர­வேற்­கின்றோம்.

 அன்­றை­ய­தினம் துக்­க­தி­ன­மா­க ­அ­னுஷ்­டிக்­க ­மு­டி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதனைக் கருத்தில் எடுத்­து ­எ­ம­து ­அன்­றை­ய ­நிகழ்­வு­களில் ஈடு­ப­டு­வ­து­ பொ­ருத்­த­மா­னது. பாட­சா­லை­களும் அலு­வ­ல­கங்­களும் இரண்­டு­ நி­மி­ட­நே­ர ­மௌ­னாஞ்­ச­லி­யை­காலை 11.00மணிக்­கு ­நி­கழ்த்­த­வேண்டும் என்­று­ எ­திர்­பார்க்­கின்றோம். 

 தனிப்­பட்­ட­வர்கள் கைகளில் கறுப்புப் பட்­டி­ அ­ணிந்­து­ த­ம­து­ து­ய­ரத்­தை­ வெ­ளிக்­காட்­டலாம். 

அன்­றை­ய­தினம் எம­து ­தா­ய­கத்தின் அனைத்துப் பகு­தி­க­ளி­லி­ருந்தும் முள்­ளி­வாய்க்­கா­லுக்­கு­ எம்­ம­வ­ரை நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். பல்­க­லைக்­க­ழ­க­ மா­ண­வர்கள் யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்­து­காலை 7.00மணிக்­கு ­முள்­ளி­வாய்க்கால் வரை ­உந்­து­ரு­ளி­வா­கனப் பேர­ணி ­ஒன்­றை­ ஒ­ழுங்­கு­ப­டுத்­தி­யுள்­ளார்கள். அவர்­களும் காலை11.00 மணி­சுடர் ஏற்றும் நிகழ்வில் பங்­கு­கொள்­வார்கள். 

நிழ்ச்­சி­நிரல் 

 மக்கள் முள்­ளி­வாய்க்­கா­லை ­த­வ­றாமல் காலை 10.15மணி­ய­ளவில் வந்­து­சே­ர­வேண்டும். மக்கள் அமர்ந்­தி­ருந்து இளைப்­பா­ற ­வ­ச­திகள் ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பா­ணத்தில் இருந்து 6 பேரூந்­து­களும் வவு­னி­யாவில் இருந்து 4 பேரூந்­து­களும் மன்­னாரில் இருந்து 5 பேரூந்­து­களும் கிளி­நொச்­சியில் இருந்து 3 பேரூந்­து­களும் முல்­லைத்­தீவில் இருந்து 10 பேரூந்­து­களும் மக்­க­ளை­ ஏற்­றி­ வந்­து­ முள்­ளி­வாய்க்­காலில் விடு­வ­து ­மட்­டு ­மன்­றி­ நி­கழ்ச்­சி­ நி­றைவின் பின்னர் திரும்­பவும் அந்­தந்த இடங்­க­ளுக்­கு ­மக்­க­ளை­ ஏற்றிச் சென்று இறக்­க ­ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. எவ்­வெந்­த­நே­ரங்­களில் எங்­கி­ருந்­து­ மக்கள் பேரூந்­து­களில் ஏறலாம் யாருடன் தொடர்­பு­ கொள்­ள­வேண்டும் போன்­ற ­வி­ப­ரங்கள் தரப்­படும். 

 சுட­ரேற்றும் நேரம் சரி­யா­க ­காலை 11.00மணி­யாகும். 10.30மணிக்­கு ­முன்னர் வெளி­மா­வட்­டங்­களில் இருந்­து­வ­ருவோர் யாவரும் ஒதுக்­கப்­பட்­ட ­தத்­த­மது இருக்­கை­களில் வந்­து­ அ­மர்ந்­து­ கொள்­ள­வேண்டும். 

 உற­வு­களைப் பறி­கொ­டுத்­த­ வ­ய­து ­மு­திர்ந்­த­ ஒ­ரு­தா­யா­ரிடம்  சுட­ரை ­மு­த­ல­மைச்சர் முதலில் கைய­ளிக்­க ­அ­த­னை­அவர் ஏற்­று ­மத்­தி­ய ­சு­ட­ரை­ ஏற்­றுவார். அவர் ஏற்­றி ­மு­டிந்­ததும் ஏனைய சுடர்­க­ளை­ பொ­து­மக்கள் ஏற்­று­வார்கள். ஏற்­றி­விட்­டு­ அதே இடத்தில் நின்­று­மலர் அஞ்­ச­லி­ செ­லுத்­து­வார்கள். 

 சுட­ரேற்றல் தொடங்கும் போது­ பொ­ருத்­த­மா­ன ­நி­னைவு இசைஎழுப்பப்படும். ஐந்துநிமிடநேரம் அப்போது மௌனம் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தப்படும். 

 நினைவு இசைநிறைவடைந்ததும் முதலமைச்சர் நினைவுநாள் உரை இடம்பெறும். உரைமுடிந்ததும் நிகழ்வுகள் முடிவுக்குகொண்டுவரப்படும்.

சகலரும் இந்ததுயரநாளில் உணர்வு பூர்வமாக எமது இறந்த உறவுகளை மென்முறையோடும் சமயச் சார்புடனும் நினைவுபடுத்துவோம். 

உறவுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவோம். குறித்தநாளின் புனிதத்தன்மையை நினைவுபடுத்துவோம். 

எவ்வாறு முரண்டு நின்ற எம் தமிழ் உறவுகள் முள்ளிவாய்க்காலின் தாற்பர்யம் உணர்ந்து தனித்துவம் உணர்ந்துதனிச் சிறப்புணர்ந்து ஒன்று சேர்ந்துள்ளார்களோ அதேபோன்று இனிவரும் வருடங்களில் எமது இனத்தை ஒன்றிணைக்கும் ஒருதுன்பியல் நாளாக மே மாதம் 18ஆம் திகதியாகிய இந் நாள் பரிணமிக்க இப்பொழுதிருந்தேஆவனசெய்வோம். !