புகைப்படமொன்றில் தாய் ஒருவர் தனது இளைய மகனின் தோளில் கையைவைத்தபடி காணப்படுகின்றார்.அவர்களிற்கு முன்னாள் இரு சகோதரிகள் பொருத்தமான சிவப்பு ஸ்கார்வ்கள் அணிந்து கையில் பூக்களுடன் காணப்படுகின்றனர். 

அதேபடத்தில் தன்னை விட உயரமாக வளர்ந்த மகனிற்கு அருகில் தந்தை காணப்படுகின்றார்.

ஆறு பேரும் அழகான மகிழச்சிகரமான நிறங்களில் ஆடை அணிந்துள்ளனர்.

அந்த படத்தை பார்த்தால் அது மகிழ்ச்சிகரமான இந்தோனேசிய  நடுத்தரவர்க்க குடும்பத்தின் படம் என்றே எண்ணத்தோன்றும்.

ஆனால் அந்த படம் இஸ்ரேலிய தீவிரவாதத்தின் புதிய அடையாளத்திற்கான குறியீடாக மாறியுள்ளது. உலகை இந்த வாரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நண்பர்களும் உறவினர்களும் அந்த முஸ்லீம் குடும்பத்தை சாதாரணமானவர்கள், நல்லவர்கள் அருகில் வாழும் கிறிஸ்தவர்களுடன் நட்புடன் பழகுபவர்கள் என தெரிவிக்கின்றனர்

தங்கள் பிள்ளைகளிற்கு வீட்டில் வைத்து கல்வி போதித்த அவர்கள் ஏனைய குழந்தைகளுடன் அவர்கள் விளையாடுவதற்கு அனுமதித்துள்ளனர்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் அனைவரும் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினர்.

கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்தனர். 

இந்த சம்பவம் இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான  சுரபயாவில் இடம்பெற்றது  இதன் போது அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கொல்லப்ட்டனர்.

புகைப்படத்தில் கமராவை ஆவலுடன் பார்த்தபடி காணப்படும் அந்த குடும்பத்தின் இளம் வாரிசான எட்டு வயது சிறுமியும் தன்னை வெடிக்கவைத்து தற்கொலை குண்டுதாரியானார்.

அவரது சகோதரிக்கு 12 வயது.

முதல்தடவையாக ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை குண்டுதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் உணர்வதற்கு முன்பாக மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது.

இம்முறை இந்தோனேசியாவின் பொலிஸ் தலைமையகத்தை  இலக்குவைத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்  தற்கொலை தாக்குதலை மேற்கொண்டனர் அவர்களில் ஏழு வயது குழந்தையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் குண்டுகளை தயாரித்துக்கொண்டிருந்த ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெடிவிபத்தில் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் ஒருவரையொருவர் நன்கு தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பொன்றின் சுரபாய பிரிவின் தலைவர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுவரையில் 13 தீவிரவாதிகளும் அவர்களுடைய குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் உயிர்பிழைத்த பிள்ளைகளிற்கு உளவியல் சிகிச்சை ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

சிறுவர்களை ஈடுபடுத்துவது பைத்தியக்காரத்தனம் என தெரிவிக்கின்றார் அரசசார்பற்ற அமைப்பொன்றை சேர்ந்த தவிக் அன்டிரி. முன்னாள் தீவிரவாதிகளின் புனர்வாழ்வு குறித்த நிலையத்தை நடத்தி வரும் அவர் இது இந்தோனனோசியாவை பொறுத்தவரை புதிய விடயம் இது தொடரலாம் என அஞ்சுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களையும் சிறுவர்களையும் தற்கொலை தாக்குதலிற்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

நைஜீரியாவின் போக்கோ ஹராம் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தோனேசிய  பிரஜைகள் ஐஎஸ் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர் இவர்கள் தற்போது நாடு திரும்புகின்றனர் இது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் திரும்பிவருகின்றனர் அதிகாரிகளிற்கே எத்தனை பேர் திரும்பி வருகின்றனர் என்பது தெரியாது என தெரிவிக்கின்றார் சிங்கப்பூரின் தேசிய பல்கலைகழகத்தின் அரசியல் பேராசிரியர் பில்வீர் சிங் இந்த விடயத்தை உரியவிதத்தில் கையாளாவிட்டால் மேலும் பல தாக்குதல்கள் நிகழக்கூடும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஏபி

தமிழில் - ரஜீபன்