வவுனியா,  தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து தாண்டிக்குளத்திற்கு துவிச்சக்கரவண்டியில் சென்ற 60 வயது மதிக்கத்தக்க வயோதிபரை கன்டர் ரக வாகனமொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளதாகவும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கும் பொலிஸார், வயோதிபரின் சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.