கூகுள் பலூன் விழவில்லை: பரீட்சார்த்த நடவடிக்கை பூர்த்தியான பின் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது 

Published By: MD.Lucias

18 Feb, 2016 | 07:22 PM
image

இலங்கை வான்பரப்பில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அதிவேக இணைய வசதிகளை பெற்றுக்கொடுக்கும் கூகுள் பலூன் உடைந்து விழவில்லை எனவும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் பூர்த்தியான பின்னரே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 இணைய சேவையை வழங்கும் கூகுள் பலூன் எனப்படும் இராட்சத வாயு பலூன் கல்ஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புப்புரஸ்ஸ, டெல்டா தோட்டம் - டேசன் பிரிவு முதலாம் இலக்க தேயிலை தோட்டத்தில் நேற்று மாலை 7.30 மணியளவில் விழுந்துள்ளது. 

இந்த பலூனை மீட்ட பொலிஸார்  தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்ப அதிகாரிகளிடம் கையளித்தனர்.

எனினும் குறித்த பலூன்  பரீட்சார்த்த நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்த பின்னரே தரையிறக்கப்பட்டதாக கூகுள் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, இந்த திட்டத்துக்கு பொறுப்பான  நவீன தொலை தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதி தொடர்பிலான அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, இலங்கையின் வான் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்த கூகுள் பலூன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36