கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றைய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூச்சுத் திணறல் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரு பிரித்தானிய ரக்பி வீரர்களுள் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

இந் நிலையில் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றைய ரக்பி வீரரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரியவருகின்றது.

குறித்த இரு பிரித்தானிய ரக்பி வீரர்களும் இலங்கையில் இடம்பெறும் போட்டியை முன்னிட்டு கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.