பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்

Published By: Priyatharshan

15 May, 2018 | 04:17 PM
image

உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று  சிகிச்சை பலனின்றி காலமானார். 

தமிழ் இலக்கியத்துறையிலும் திரைப்படத் துறையிலும் தனக்கென ஓர் தனி இடத்தைப்பிடித்துக் கொண்ட தமிழ் எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமாகிய பாலகுமாரன் இன்று சென்னையில் உயிரிழந்தார்.

இவரது இலக்கியங்களில் இரும்புக் குதிரை, மெர்க்குரிப் பூக்கள், உடையார் போன்ற நாவல்கள் பிரபல்யமானவை இவரது இரும்பு குதிரை நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலக்கியத்துறை மட்டுமல்லாது திரைத்துறைக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். அந்த வகையில் சூப்பர் ஹிட் படங்களான பாட்ஷா, குணா, முகவரி, சிட்டிசன், நாயகன், உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் வசனம் எழுதியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.

அதன்பின் தற்போது மீண்டும் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர்  சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13