எமது அணியின் துடுப்பாட்டம் பிரச்சினைக்குரியது - அஸ்வின்

Published By: Priyatharshan

15 May, 2018 | 12:03 PM
image

பஞ்சாப் அணியின் துடுப்பாட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என அணியின் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

பெங்களுர் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி மிகமோசமான தோல்வியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அஸ்வின் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அஸ்வின் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எங்களது அணியின் துடுப்பாட்டம் பிரச்சினைக்குரியதாக உள்ளது . இந்த ஐ.பி.எல். போட்டிகளில்  நாங்கள் மிகத்திறமையான, பலம் வாய்ந்த அணியாக நுழையவில்லை, ஆனால் முதல் கட்ட போட்டிகளில் நாங்கள் உதைத்து தள்ளிக்கொண்டு முன்னணிக்கு வந்தோம்.

மிகச்சரியாக தெரிவிப்பதென்றால் நாங்கள் இவ்வளவு சிறப்பாக விளையாடுவோம் என நினைத்துப்பார்க்கவில்லை.

இதேவேளை நாங்கள் மேலும் இரண்டு போட்டிகளில் வென்று இதனை விட மேலும் புள்ளிகளை பெற்றிருக்கலாம்.

பெங்களுர் அணிக்கு எதிரான தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு கடினமான விடயம் என குறிப்பிட்டுள்ள அஸ்வின் ஐ.பி.எல்.லில் இலகுவான விடயம் என எதுவும் இல்லை எட்டு அணிகளுமே வலுவானவை எதிர்வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35