மெட்றிட்  பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான ஒற்றையர் சம்பியன் பட்டத்தை 21 வயதான ஜேர்மனியின் அலெக்ஸ்சாண்டர்  ஸெவரெவ் வென்றெடுத்தார்.

முதலாவது அரையிறுதியில் தென் ஆபிரிக்காவின் கெவின் அண்டர்சனை எதிர்த்தாடிய  டொமினிக்  தியெம் இரண்டு செட்களையும் 6க்கு 2, 6க்கு 2  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

இரண்டாவது அரையிறுதியில் கனடாவின் டெனிஸ் ஷெபவலோவ்வை எதிர்கொண்ட அலெக்ஸ்சாண்டர்  ஸெவரெவ் 6 க்கு 4, 6 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஸ்பெய்னின் மெட்றிட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக்  தியெம்மை எதிர்கொண்ட அலெக்ஸ்சாண்டர்  ஸெவரெவ் 2:0 என்ற செட் கணக்கில்  வெற்றி சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.