காணாமல்போனோர் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் தேடுதலில் இராணுவத்தின் ஆதாரங்களையும் சேர்த்துக்கொள்வது சாதகமாக அமையும்.  இறுதி யுத்தத்தில் சரணடைந்தோர் தொடர்பில் இராணுவம் வசமுள்ள தகவல்களையும் பெறுவது  விசாரணை செயற்பாடுகளுக்கு வலுசேர்ப்பதாக அமையும் என்று    அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆயுத, பண உதவிகளை வழங்கியவர்கள் தேசத்துரோகிகள் எனவும்  அரசாங்கம்  குறிப்பிட்டது. 

விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கு பண உதவிகளையும், ஆயுத உதவிகளையும் வழங்கியோர் தொடர்பில் விரைவில் சரத் பொன்சேகா தகவல்களை   வெளியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன்      58ஆவது படைத்தளத்தின் சரணடைந்தவர்கள் தொடர்பில் இராணுவம் வசம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றில் முன்வைக்கவேண்டும் என்று  தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில்     அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போதே அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.