இலங்கை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஏழு நாட்கள்   விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள  இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி பிபின் ராவத்  இந்திய அமைதிப் படை வீரர்களுக்காக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்ட இராணுவ நினைவு தூபிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை இராணுவ சம்பிரதாய முறைப்படியான மாரியாதையுடன் நினைவு தூபிக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி யுத்தத்தில் தமது உயிர்களை இழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஆணையத்தின் உயர் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.