ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதி மைத்திரியிடம் தெரிவித்தது என்ன ? 

Published By: Priyatharshan

15 May, 2018 | 04:56 AM
image

இலங்கையின் தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டிருப்பதாக  ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்க்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை டெஹரான் நகரில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தார்.

 அத்துடன் ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால உறவினை  முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் அவசியமும், இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை போன்றே மக்களுக்கிடையிலும் தொடர்புகளை பலப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடங்களைக் கொண்டுள்ள இருநாடுகளும் தமது அபிவிருத்தி வாய்ப்புக்கள் குறித்தும் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை தேயிலை மீது தான் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஈரானின் ஆன்மீகத் தலைவர்  ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். 

இரண்டு நாட்கள் அரசமுறைப் பயணம் மேற்கொண்டு ஈராக்கு  சென்றுள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிற்கும்  ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கும்  இடையிலான சந்திப்பு டெஹரான் நகரில் இடம்பெற்றது. இலங்கை -ஈரான் உறவுமுறை மற்றும் இருநாட்டு உடன்படிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை ஈரானுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் ஈரானிய தலைவர் அயத்துல்லா அலி கமேனியை சந்தித்திருந்தார். 

மிக முக்கிய நிகழ்வாக  இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவரிடையிலும் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

இரு நாட்டு மக்களினதும் எண்ணங்களில் ஒற்றுமைகள் காணப்படுவதை ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவுடன்  இடம்பெற்ற கலந்துரையாடலின் மூலமாக தாம் அறிந்துகொண்டதாகவும் ஈரானிய ஆன்மீகத் தலைவர் தெரிவித்தார். 

அதற்கமைய இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்தி, சகோதர நாடுகளாக முன்னோக்கி செல்ல காணப்படும் வாய்ப்பினை சுட்டிக்காட்டிய ஈரானிய ஆன்மீகத் தலைவர், இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆன்மீகத் தலைவர் என்ற வகையில் அயத்துல்லா அலி கமேனி ஆற்றிவரும் பணிகளை பாராட்டியதுடன், பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகமே இலங்கையில் காணப்படுவதுடன். சமயக் கோட்பாடுகளின் ஊடாகவே சமூகத்தை நல்வழிப்படுத்த முடியுமெனவும் குறிப்பிட்டார்.மேலும்  ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி,  இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரானுக்கு அரசமுறை விஜயம் மேற்கொள்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கும் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, விருந்தோம்பல் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன  இதன்போது ஈரானிய ஆன்மீகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். இதனிடையே ஈரானின் டெஹரான் நகரில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி அவர்கள் நேற்று முன்தினம்  (13) பிற்பகல் சந்தித்தார்.

 இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்களுடன் சுமுக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். கல்விமான்கள், தொழிற்துறை நிபுணர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04