இந்தோனேசியாவின்  பொலிஸ் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின்  சுரபாயா நகரிலுள்ள  பொலிஸ் தலைமையகத்திலேயே குறித்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு தாக்குதலில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தோனேசியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் 41 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.