அவுஸ்திரேலிய ரக்பி வீரரொருவர் விளையாட்டு மைத்தானத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

20 வயதான டொரி புரோனிங் என்ற வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸின் இலவொராவில் இடம்பெற்ற ரக்பி லீக் போட்டி தொடர் ஒன்றின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த குறித்த வீரர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.