(இராஜதுரை ஹஷான்)

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்படவிருக்கும் சுதந்திர  வர்த்தக உடன்படிக்கையினூடாக இந்தியாவின் எட்கா உடன்படிக்கையும் மறைமுகமாக நிறைவேற்றப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிரி ஜயகொடி தெரிவித்தார்.

மேலும், நாட்டில் தற்போது அனைத்து தேசிய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் தேசிய உற்பத்திகளை பாதுகாப்பதை விடுத்து முறையற்ற வேலைத் திட்டங்களையே முன்னெடுத்து வருகின்றது.

1998 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்தது. 

இந் நிலையில் சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கையின் மூலம் சிங்கப்பூர் நாட்டினரே அதிகளவான அனுகூலங்களை அனுபவிக்க வேண்டிய நிலை தோற்றம் பெறும். அத்துடன் சொந்த நாட்டிலே இலங்கை பிரஜைகளின் தொழில் உரிமைகள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகலாம்.

அத்துடன் இந்த  உடன்படிக்கையினூடாக இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கையும் மறைமுகமாக நிறைவேற்றப்படும் என்றார்.