(நெவில் அன்தனி)

கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மலேசிய பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையின் வினோஜ் சுரஞ்சய டி சில்வா, காலிங்க குமார ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் ருமேஷிக்கா ரத்நாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.27 செக்கன்களில் நிறைவு செய்த வினோஜ் சுரஞ்சய டி சில்வா தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதியுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். 

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய காலிங்க குமாரகே, அப் போட்டியை 46.00 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.76 செக்கன்களில் நிறைவு செய்த ருமேஷிக்கா ரத்நாயக்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இவர்கள் மூவரும் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறக்கூடியவர்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.