புகழ்பெற்ற சூழலியலாளர் மற்றும் தாவரவியலாளர் உயிர் வாழ விருப்பமில்லாது தனது 104ஆவது வயதில், அரசு அனுமதி பெற்று, விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லண்டனில் பிறந்த டேவிட் குடால் பல்வேறு கண்டுபிடிப்புகள், செயல்பாடுகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

உரிய நேரம் வரும்போது மரணத்தைத் தேடிக்கொள்ளும் உரிமை மனிதருக்கு உண்டு என்பதை வலியுறுத்தும் "எக்ஸிட் இன்டர்நெஷனல்" என்ற அமைப்பின் உறுப்பினராக இருந்தார்.

நோய் பாதிப்பு ஏதும் இல்லையென்றாலும் உடலியல் மாற்றங்கள் அவரை வாட்டியதனால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்ள விரும்புவர்கள்  அனுமதி கோரி முறைப்படி கடிதம் கொடுத்தால் அவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளலாம்  என அண்மையில் சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் உயிரிழக்க டேவிட் திட்டமிட்டார்.

தனது திட்டத்துக்கு அமைவாக  விமானம் மூலம்  சுவிட்சர்லாந்த் சென்ற டேவிட், அங்கு அரசு அனுமதி பெற்று தனது உயிரை விஷ ஊசி போட்டு மாய்த்துக்கொண்டுள்ளார்.

இறுதியாக பேரக் குழந்தைகளை சந்தித்து விட்டு, "ஓடே-டு-ஜாய்" (Ode - to - Joy ) எனும் பித்தோவனின் (Beethoven) இசையை ரசித்தபடி உயிரிழந்துள்ளார்.

இதனை சுவிட்சர்லாந்து தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.