வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எக்ஸ்ரே இயந்திரம் கடந்த ஐந்து நாட்களுக்கு மேல் பழுதடைந்து காணப்படுவதினால் தாங்கள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகுவதாக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 குறித்த வைத்தியசாலைக்கு அருகில் காணப்படும் தனியார் வைத்தியசாலைகளில் ரூபா 800 தொடக்கம் ரூபா1000 வரை பணத்தினை செலுத்தி எக்ஸ்ரே எடுக்கவேண்டும் எனின் மக்களுக்காகவென பொது வைத்தியசாலை ஏன் அமைக்கப்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தொடர்பு கொண்டு வினாவிய போது,

வைத்தியசாலையில் கடந்த ஜந்து நாட்களாக எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து காணப்படுகின்றது. அதனை சீர்செய்வதற்குரிய செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மற்றும் புதியதொரு எக்ஸ்ரே இயந்திரம் சில நாட்களில் வைத்தியசாலையில் பூட்டப்படவுள்ளது

நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதித்து அம்புலன்ஸ் வண்டி மூலம் செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று ஏக்ஸ்ரே எடுப்பதாகவும் மேலதிக தகவல் தேவையெனின் நோயாளிகள் தன்னை நாடுமாறும் தெரிவித்தார்.