எந்த அரசியல்வாதியையும் வணங்கப்போவதுமில்லை  எந்த அரசியல்வாதியிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை என முன்னாள் இராணுவதளபதியும்  அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சரத்பொன்சேகா என்ற இந்த நபர் தனது வாழ்க்கையில் தனது பெற்றோர்களையும் மதகுருக்களையும் மாத்திரம் வணங்கியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் எந்த அரசியல்வாதியையும் வணங்கியதில்லை இனியும் அவ்வாறு செய்யப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ என்னை சிறைப்பிடித்தவேளை  அவரிடம் மன்னிப்பு கோருங்கள் அவர் உங்களை விடுதலை செய்வார் என தெரிவித்தனர் ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் நான் சில கருத்துக்களை தெரிவித்துள்ளேன்,சிலரை அரசியல்ரீதியாக விமர்சித்துள்ளேன் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சிறிசேனவிடம் மன்னிப்பு கேட்டேன் என்பது பிழையான தகவல் எனவும் குறிபபிட்டுள்ளார்.

நான் சிறிசேனவுடன மூன்று நிமிடம் பேசினேன் அவர் எங்களிற்குள் ஏதாவது விடயங்கள் இருந்தால் அதனை பகிரங்கப்படுத்தவேண்டாம் நாங்களே பேசித்தீர்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.